அம்பாறை மாவட்ட பாண்டிருப்பு ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மக்களையும், நாட்டையும் பாதுகாக்குமாறு கோரி விசேட பிரார்த்தனை வழிபாடு இன்று சிவஸ்ரீ நல்லராசா குருக்கள் தலைமையில் நடைபெற்றது.
பாண்டிருப்பு ஸ்ரீ சித்தரவேலாயுத சுவாமி ஆலயத்தின் நிர்வாக சபையின் ஏற்பாட்டில் இன்று விசேட யாக பூஜை மற்றும் வழிபாடுகள் நடைபெற்றது.
இதன்போது நாட்டையும், நாட்டு மக்களையும் அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மக்களை பாதுகாக்குமாறு சிவஸ்ரீ நல்லராசா குருக்களினால் வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டன. சுகாதார விதிமுறைகளைப் பின்பற்றி நடைபெற்ற இவ் மஹாயாக பூசையில் ஆலய நிர்வாக சபையினர், குறைந்தளவிலான பக்கதர்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.