பியகமவில் சிறுவர் வைத்தியசாலை அமைக்க தீர்மானம்

0
133
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஆலோசனையின் பிரகாரம் பியகம பிரதேசத்தை மையமாகக் கொண்டு சிறுவர் வைத்தியசாலையை நிர்மாணிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் ருவான் விஜயவர்தன தலைமையில் இன்று (17) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்த வைத்தியசாலையை நிர்மாணிப்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.இக்கலந்துரையாடலில் தற்போதைய சவால்கள் மற்றும் திட்டம் தொடர்பான திட்டங்கள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டதாக ருவான் விஜயவர்தன தெரிவித்தார்.பியகம வைத்தியசாலையுடன் இணைந்து ஆரோக்கிய கிராமம் என்ற கருத்தின் அடிப்படையில் வைத்தியசாலை ஒன்றை நிர்மாணிப்பதிலும் அரசாங்கம் கவனம் செலுத்தி வருகின்றது.