மீள்குடியேற்றம், கண்ணிவெடி அகற்றல் மற்றும் புகலிடக் கோரிக்கைகள் குறித்து கிளிநொச்சி பதில் அரச அதிபருடன் சுவிஸ் தூதரக அதிகாரிகள் கலந்துரையாடினர்.
இலங்கைக்கான சுவிஸ் தூதரக மற்றும் குடிவரவு – குடியகழ்வுத் திணைக்கள அதிகாரிகள், கிளிநொச்சிக்கு சென்று பதில் அரசாங்க அதிபர் எஸ். முரளிதரனுடன் சந்தித்து கலந்துரையாடினர்.
இந்தச் சந்திப்பு கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் காரியாலயத்தில் நடைபெற்றது.
இதன்போது, கிளிநொச்சி மாவட்டத்தின் தற்போதைய நிலைமைகள், பொருளாதார நிலவரங்கள், மீள்குடியேற்றம், கண்ணிவெடி அகற்றல் மற்றும் புகலிடக் கோரிக்கைகள் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடினர்.