புற்றுநோய்க்கான மருந்துகள் கிடைக்க 6 மாதங்கள் தாமதம்

0
126
Illustration photo shows various medicine pills in their original packaging in Brussels, Belgium August 9, 2019. REUTERS/Yves Herman/Illustration

புற்று நோயாளர்களுக்கான சிகிச்சைக்காக உலக சுகாதார ஸ்தாபனத்திடம் இருந்து பெறப்படவுள்ள மருந்துகள் மேலும் ஆறு மாதங்களுக்கு தாமதமாகும் என தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டு பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் இஷானி பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். மருந்துகளை வாங்குவதற்கான கொள்முதல் நடவடிக்கைகளுக்கு கால அவகாசம் தேவைப்படுவதே இதற்குக் காரணம் எனவும், வைத்தியசாலைகளில் புற்றுநோய்க்கான மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாகவும் வைத்தியர் இஷானி பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்தால் எளிதில் குணப்படுத்த முடியும் என்றும் குறிப்பாக மார்பக புற்றுநோயை முன்கூட்டியே கண்டறியும் மையமானது நாரஹேன்பிட்டியில் உள்ளதாகவும் இரத்தினபுரி, யாழ்ப்பாணம் மற்றும் மாத்தறை வைத்தியசாலைகளிலும் புற்றுநோயை கண்டறியும் சிகிச்சை நிலையங்கள் உள்ளதாகவும் தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.