26 C
Colombo
Saturday, April 1, 2023
12,987FansLike
19,993SubscribersSubscribe

புலிகள் மீதான பிரித்தானியாவின் தடை தவறானது; விஷேட ஆணையம் தீர்ப்பு

விடுதலைப் புலிகள் மீதான பிரித்தானியா அரசாங்கத்தின் தடை தவறானது என பிரித்தானியாவில் தடை செய்யப்பட்ட அமைப்புக்கள் தொடர்பான விஷேட ஆணையம் இன்று தீர்ப்பளித்திருக்கின்றது.

நாடுகடந்த தமிழீழ   அரசாங்கத்தினால் தொடுக்கப்பட்ட இந்த வழக்கின் தீர்ப்பு சற்று முன்னர் வெளியிடப்பட்டது.

இந்த வழக்கானது திறந்த சாட்சியங்களின் அடிப்படையிலும், இரகசிய சாட்சியங்களின் அடிப்படையிலும் நடைபெற்றது. திறந்த சாட்சியங்களின் விசாரணையின் போது இங்கிலாந்து மகாராணியாரின் QC மாண்பைப்பெற்ற Maya Lester QC, உட்பட Malcolm Birdling of Brick Court Chambers with Jamie Potter and Caroline Robinson of Bindmans LLP ஆகியோர் நாடு கடந்த தமிழீழ அரசாங்க்தின் சட்டவாளர்களாக வாதிட்டிருந்தனர்.

இரகசிய விசாரணை போது இங்கிலாந்து மகாராணியாரின் QC மாண்பைப்பெற்ற Angus McCulloch Q.C and Rachel Tony. ஆகியோர் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் சட்டவாளராக வாதிட்டிருந்தார்.

எவ்விதமான பயங்கரவாத செயற்பாடுகளிலும் தமிழீழ விடுதலைப்புலிகள் ஈடுபடவில்லை எனச் சுட்டிக்காட்டி தடையினை நீக்குமாறு பிரித்தானியாவின் உள்துறை அமைச்சிடம் 2008ம் ஆண்டில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கோரியிருந்தது.

இதனை பிரித்தானிய உள்துறை அமைச்சு நிராகரித்திருந்த நிலையில், தடையை நீக்கும் செயற்பாடாக Proscribed Organisations Appeal Commission (‘POAC’) ஆணையத்திடம் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் சட்ட நடவடிக்கையினை முன்னெடுத்திருந்தது.

இந்த நிலையில் சற்று முன்னர் வெளியான 38 பக்கத் தீர்ப்பின்படி விடுதலைப் புலிகள் மீதான தடை தவறானது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் பிரித்தானிய அரசாங்கம் தனது முடிவை அடுத்த சில வாரங்களில் அறிவிக்கும் எனத் தெரியவருகின்றது.

Related Articles

சந்தையில் மாபிள்களின் விலைகள் குறைப்பு!

சந்தையில், மாபிள்களின் விலை, 12.5 முதல் 15 வீதத்திற்கு இடைப்பட்ட அளவில் குறைவடைந்துள்ளதாக, லங்கா டைல் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் மஹேந்ர ஜயசேகர தெரிவித்துள்ளார். ரூபாவின்...

சபாநாயகர் தலைமையில் இன்று விசேட கூட்டம்

அரசியலமைப்பு பேரவையின் விசேட கூட்டமொன்று இன்று (1) காலை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நடைபெறவுள்ளது. சுயாதீன ஆணைக்குழுக்களை நியமித்தல் உள்ளிட்ட பல விடயங்கள்...

சி.ஐ.டி. விசாரணை கோருகிறார் அமைச்சர் கஞ்சன

கடந்த 28 ஆம் திகதி கொலன்னாவையில் உள்ள பெட்ரோலியக் கூட்டுத்தாபன முனையத்தில் எரிபொருள் விநியோகிக்கும் செயற்பாடுகளுக்கு இடையூறு விளைவித்தவர்களுக்கு எதிராக குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் மூலம் விசாரணை நடத்துமாறு அமைச்சர் கஞ்சன...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest Articles

சந்தையில் மாபிள்களின் விலைகள் குறைப்பு!

சந்தையில், மாபிள்களின் விலை, 12.5 முதல் 15 வீதத்திற்கு இடைப்பட்ட அளவில் குறைவடைந்துள்ளதாக, லங்கா டைல் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் மஹேந்ர ஜயசேகர தெரிவித்துள்ளார். ரூபாவின்...

சபாநாயகர் தலைமையில் இன்று விசேட கூட்டம்

அரசியலமைப்பு பேரவையின் விசேட கூட்டமொன்று இன்று (1) காலை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நடைபெறவுள்ளது. சுயாதீன ஆணைக்குழுக்களை நியமித்தல் உள்ளிட்ட பல விடயங்கள்...

சி.ஐ.டி. விசாரணை கோருகிறார் அமைச்சர் கஞ்சன

கடந்த 28 ஆம் திகதி கொலன்னாவையில் உள்ள பெட்ரோலியக் கூட்டுத்தாபன முனையத்தில் எரிபொருள் விநியோகிக்கும் செயற்பாடுகளுக்கு இடையூறு விளைவித்தவர்களுக்கு எதிராக குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் மூலம் விசாரணை நடத்துமாறு அமைச்சர் கஞ்சன...

பிரபல நடிகர் காலமானார்

பிரபல நடிகர் அமரசிறி கலன்சூரிய தனது 82 ஆவது வயதில் இன்று (01) காலை காலமானார்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவின் வீட்டின் முன்னால் ஆர்ப்பாட்டம் ; ஆர்ப்பாட்டக்காரர்கள் கைது

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவின் வீட்டின் முன்னால் நேற்று (31) அரகலய செயற்பாட்டாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஒருவருடகாலத்திற்கு முன்னர் கோட்டாபயவின் மிரிஹான வீட்டின் முன்னால் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களை...