புஸ்ஸ உயர் பாதுகாப்பு சிறைச்சாலையில் கையடக்கத் தொலைபேசி உள்ளிட்ட பல பொருட்கள் மீட்பு!

0
13

புஸ்ஸ உயர் பாதுகாப்பு சிறைச்சாலையில் விசேட கைதிகள் அடைக்கப்பட்டுள்ள அறையில் கையடக்கத் தொலைபேசி உள்ளிட்ட பல பொருட்களை காவல்துறை விசேட அதிரடிப்படையினர் கண்டுபிடித்துள்ளனர்.
சிறைச்சாலையின் டி பிரிவில் உள்ள 83 ஆவது அறையில் இவை மறைத்து வைக்கப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

நேற்றைய தினம் கண்டெடுக்கப்பட்ட பொருட்களில் சிம் அட்டை, (பேட்டரி சார்ஜர் ) Battery Charger மற்றும் போதைப் பொருட்கள் ஆகியன காணப்பட்டுள்ளன. கைப்பற்றப்பட்ட கைத்தொலைபேசிகள் உள்ளிட்ட பொருட்கள் சிறைச்சாலை கட்டுப்பாட்டு அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.