பெரும்போக அறுவடை : உரிய விளைச்சல் கிடைக்கவில்லை – விவசாயிகள் விசனம்!

0
72

பெரும்போக செய்கையில் ஏற்பட்ட நோய் தாக்கங்கள் காரணமாக, உரிய விளைச்சல் கிடைக்கவில்லை என்றும் தற்போது அறுவடை செய்கின்ற நெல்லை உரிய விலைக்கு சந்தைப்படுத்தக் கூடிய வசதி இல்லை என்றும் கிளிநொச்சி விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

கிளிநொச்சி அக்கரான்குளம் குளம் கமநல சேவை நிலையத்தின் கீழ் இம்முறை ஆறாயித்து 374 ஏக்கர் நிலப்பரப்பில் பெரும்போக நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இங்கு மேற்கொள்ளப்பட்ட பெரும்போக நெற்செய்கையின் அறுவடை ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், உரிய விளைச்சல் கிடைக்கவில்லை எனவும் அறுவடை செய்கின்ற நெல்லை உரிய விலைக்கு சந்தைப்படுத்தக் கூடிய வசதி இல்லை என்றும் விவசாயிகள் குறிப்பிட்டுள்ளனர்.