வவுனியா பழைய பேருந்து நிலையத்தில் நேற்று ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக, வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.
தலவாக்கலை பகுதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
தடவியல் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்ட நிலையில் குறித்த பகுதிக்கு வந்த பதில் நீதிவான் தி.திருவருள் சடலத்தினை பார்வையிட்டிருந்தார். இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.