பேலியகொட மத்திய மீன் சந்தையில் கொரோனா தொற் றாளர்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர்கள் இதுவரை 1545 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடை யாளம் காணப் பட்டுள்ளதாக கொவிட் -19 கொரோனா தடுப்பு மையம் தெரிவித்துள்ளது.
799 பேர் பேலியகொட மீன் சந்தையில் பணியாற்றிய ஊழி யர்கள் என்றும் 746 பேர் கொரோனா தொற்றாளர் களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தவர்கள் என கொ ரோனா தடுப்பு மையம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், பேருவளை, காலி, தெவிநுவர , அம்பந் தோட்டை மற்றும் வாளைச்சேனை மீன்பிடிதுறை முகங்களில் இருந்து இதுவரை கொரோனா தொற்றாளர்கள் 44 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
பேருவளை மீன்பிடி துறைமுகத்தில் 20 பேர், வாளைச் சேனை மீன்பிடி துறைமுகத்தில் 14 பேர், காலி மீன்பிடி துறைமுகத்தில் 5 பேர், தெவிநுவர மீன்பிடி துறைமுகத்தில் 3 பேர் மற்றும் அம்பாந்தோட்டை மீன்பிடி துறை முகத்தில் 2 பேர் ஆகியோர் கொரோனா தொற்றாளர்க ளாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.