பேஸ்புக்கில் ஐபோனை கிண்டல் செய்த சம்சுங்!

0
305

ஐபோனின் புதிய மொடல்களுக்கு அப்பிள் நிறுவனம் சார்ஜர் மற்றும் இயர்பொட்ஸ் வழங்காததை போட்டி நிறுவனமான சம்சுங், மறைமுகமாக கிண்டல் செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

2 நாட்களுக்கு முன்னர்  அப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்த ஐபோன் 12 சீரிஸ் ஸ்மார்ட் தொலைபேசிகள், சார்ஜர் மற்றும் இயர்பொட்ஸ் இன்றி விற்பனை செய்யப்படவுள்ளது.

இதை கிண்டல் செய்யும் விதமாக ஐபோன் 12 போல் இல்லாமல், சார்ஜர், கெமரா, பட்டரி உள்ளிட்ட அடிப்படை தேவைகள் அனைத்தையும் கேலக்ஸி தரும் என பேஸ்புக் பக்கத்தில் சம்சுங் பதிவிட்டிருந்தது.

குறித்த பதிவானது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.