25.1 C
Colombo
Monday, October 14, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

பொகவந்தலாவயில் இரு பெண்களுக்கு கொரோனா

பொகவந்தலாவ, கொட்டியாகலை மத்திய பிரிவு தோட்டத்தில் கொரோனா தொற்று உறுதியான இரண்டு பெண்களும் மாத்தரை கம்புருபிட்டிய பகுதிக்கு நேற்று இரவு அனுப்பி வைக்கபட்டுள்ளதாக பொகவந்தலாவ பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர்.

கொழும்பு பேலியாகொட மீன் சந்தைக்கு சென்று பொகவந்தலாவ பகுதிக்கு மீன் ஏற்றி வந்த லொறியின் சாரதி கடந்த ஞாயிற்றுக்கிழமை கொரோனா தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்டிருந்தது.

அதனையடுத்து அவரது குடும்பத்தில் உள்ள பத்து பேருக்கும் பி. சி. ஆர் பரிசோதனை மேற்கொண்ட போது ஒரு குடும்பத்தை சேர்ந்த இரண்டு பெண்களுக்கு தொற்று உறுதியானது.

இவ்வாறு கொரோனா தொற்று உறுதியான பெண் ஒருவர் கடந்த 20ம் திகதி பொகவந்தலாவ சிறி தண்டாயுதபாணி ஆலயத்திற்கு பூஜை ஒன்றில் கலந்து கொண்டமையினால் குறித்த ஆலயம் மூடப்பட்டு ஆலயத்தில் உள்ள ஆறு பேர் தனிமை படுத்தபட்டுள்ளனர்.

கடந்த 20ம் திகதி பூஜை வழிபாட்டில் கலந்து கொண்ட அனைத்து அடியார்களையும் பொகவந்தலாவ பொது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்திற்கு சமூகம் தந்து பரிசோதனைக்கான தமது பெயர்களை பதிவு செய்து கொள்ளுமாறு பொது சுகாதார பரீசோதகர்கள் கோரியுள்ளனர்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles