பொதுச்சுகாதார பரிசோதகர்கள் பலருக்கு மரண அச்சுறுத்தல்!

0
286

இலங்கை பொதுச்சுகாதார பரிசோதகர்கள் சங்க(PHIU) உதவித் தலைவர் உட்பட அநேக பொதுச்சுகாதார பரிசோதகர்கள்(PHIs) மரண அச்சுறுத்தல்களை எதிர்கொண்டுள்ள போதிலும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் அவர்கள் தங்களை தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் ஈடுபடுத்தி வருவதாக பொதுசுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

“இவ்வாறான மரண அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளபோதிலும் கடமையை நிறைவேற்றுகிறோம்” என இலங்கை பொதுச்சுகாதார பரிசோதகர்கள் சங்க உதவித் தலைவர் ஏ.யு.ரி.குலதிலக தெரிவித்துள்ளார்.

மரண அச்சுறுத்தல்களைப்  எதிர்கொண்ட பத்து சுகாதார பரிசோதகர்கள் தமது பாதுகாப்புக்காக பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.