பொதுச்சுகாதார பரிசோதகர்கள் இருவருக்கு கொரோனா

0
400

அம்பாறை மாவட்டம் நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் கடமையாற்றும் இரு பொதுச்சுகாதார பரிசோதகர்கள் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதேவேளை, கல்முனை பிராந்தியத்தில் உள்ள சம்மாந்துறை வளத்தாப்பிட்டி பிரிவு முடக்கப்பட்டுள்ளதுடன் இப்பிரதேசத்தில் மூன்று நாட்களில் 47 நோயாளிகள் இனங்காணப்பட்டுள்ளதுடன் ஒருவர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

எவ்வாறாயினும் கொரோனா தொற்று பரவல் தொடர்பில் நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரியிடம் வினவியபோது இவ்விடயம் தொடர்பில் தகவல்களை வழங்க மறுத்ததுடன் கல்முனை பிராந்திய சுகாதார பணிப்பாளர் ஜி.சுகுணனிடம் கொள்ளுமாறு கூறியதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.