பொருளாதார கணக்கெடுப்பினை நடத்த அமைச்சரவை அனுமதி

0
8

நாட்டில் பொருளாதார கணக்கெடுப்பினை நடத்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.அதன்படி, விவசாயம் மற்றும் விவசாயம் சாராத பொருளாதார நடவடிக்கைகளை தனித்தனியாக உள்ளடக்கி, இந்த பொருளாதார கணக்கெடுப்பை இரண்டு கட்டங்களாக நடத்துவதற்குத் தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபர திணைக்களம் திட்டமிட்டுள்ளது.

அதன்படி, 2025 ஆம் ஆண்டில் விவசாய நடவடிக்கைகளும், 2026 ஆம் ஆண்டில் விவசாயம் சாராத நடவடிக்கைகளும் கணக்கெடுப்பு செய்யப்படவுள்ளது.நாட்டில் இறுதியாகப் பொருளாதார கணக்கெடுப்பு 2013 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரை நடத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.