பொலிஸார் என்ற போர்வையில் கொள்ளையில் ஈடுபட்ட இருவர் கைது

0
169

பொலிஸார் என்று தம்மை அடையாளப்படுத்திக்கொண்டு மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், நபர்களை அச்சுறுத்தி அவர்களிடமிருந்து தொலைபேசிகள் மற்றும் மடிக்கணினிகள் உள்ளடங்களாக 90 உபகரணங்களை கொள்ளையடித்து சென்றுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு கொள்ளையில் ஈடுபட்ட இருவரை வடகொழும்பு பிரிவின் குற்றப்புலனாய்வு பிரிவினர் கொழும்பு முகத்துவாரம் பகுதியில் வைத்து கைதுசெய்துள்ளனர்.

குறித்த இருவர் தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளியேயே இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

எப்பல் ரக தொலைபேசிகள் 37, 47 ஸ்மார்ட் தொலைபேசிகள், 5 மடிக்கணினிகள், இரண்டு டெப்கள் என்பவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

குறித்த இருவரும் கொள்ளையடித்ததாகக் கூறப்படும் மேலும் பல பொருட்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.