போதைப்பொருளுடன் இளைஞன் கைது!

0
35

யாழ்ப்பாண நகர் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் இளைஞர் ஒருவர் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார்.

வண்ணார் பண்ணையைச் சேர்ந்த 27 வயதான இளைஞனே யாழ் மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.

சந்தேக நபரிடம் இருந்து 60 கிராம் ஹெரோயின் மீட்கப்பட்டுள்ளது. விசாரணைகளின் பின்னர் சந்தேக நபரை நீதிமன்றில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.