மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேசத்தில் இன்றைய தினம் சினோபாம் கொவிட் தடுப்பு ஊசி ஏற்றும் நடவடிக்கைகள் ஆரம்பித்துவைக்கப்பட்டன.
வெல்லாவெளி மகா வித்தியாலயம் மற்றும் திருப்பழுகாமம் கண்டுமணி மகா வித்தியாலயம் ஆகியவற்றில் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் நடைபெற்றுவருகின்றன.
வெல்லாவெளி மகா வித்தியாலயத்தில் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் ஆர்.இராகுலநாயகி தலைமையில் நடைபெற்ற இந்த ஆரம்ப நிகழ்வில் இராணுவ மற்றும் பொலிஸ் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
இன்றைய தினம் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், உள்ளுராட்சிமன்ற ஊழியர்கள், பொலிஸார் ஆகியோருக்கு தடுப்பூசிகள் ஏற்றும் பணிகள்முன்னெடுக்கப்பட்டன.
போரதீவுப்பற்று பிரதேசத்தில் அண்மைக்காலமாக கொரனா தொற்று அதிகரித்துவரும் நிலையில் எவ்வித அச்சமுமின்றி தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ளுமாறும் சுகாதார தரப்பினர் தெரிவித்துள்ளனர்.