2018ஆம் ஆண்டு ஆனி மாதம் தமது சொந்த மகளான 10 வயது சிறுமியை தகாத முறைக்கு உட்படுத்திய எதிரியான தந்தைக்கு 10 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து நேற்று (12) நீதிபதி இளஞ்செழியன் தீர்ப்பளித்துள்ளார்.
குறித்த மகளை சத்தம் போட விடாது தடுக்கும் முகமாக வன்மையான முறையில் தனது தந்தை குற்றம் புரிந்ததாக நீதிமன்றில் அழுத வண்ணம் சிறுமி சாட்சியம் அளித்துள்ளார்.திடீரென தான் எழுந்த போது மகளையும் தனது கணவரையும் காணவில்லை எனவும் மதுபோதையில் மகளை தகாத முறைக்கு கணவன் ஈடுபடுத்தியதை தான் கண்டதாகவும் உடனடியாக பொலிஸாருக்கு தொலைபேசி மூலம் அழைத்ததையடுத்து பொலிஸார் அதிகாலையில் வீட்டில் வைத்து கைது செய்ததாக சிறுமியின் தாயும் எதிரியின் மனைவியுமான குறித்த பெண் நீதிமன்றில் சாட்சியளித்துள்ளார்.இந்நிலையில் நீதிபதி இளஞ்செழியன் 10 வயது நிரம்பிய சொந்த மகள் மீது தந்தை மேற்கொண்ட இந்த சம்பவத்தை அடுத்து குற்றவாளிக்கு கடுமையான தண்டனை வழங்குவதே பொருத்தம் என தெரிவித்து 10 ஆண்டுகள் கடுழிய சிறையும் 2 இலட்சம் ரூபா நட்டஈடும் வழங்கி தீர்ப்பளித்துள்ளார்.
மேலும் நட்ட ஈட்டை செலுத்த தவறும் பட்சத்தில் இரு ஆண்டு கடூழிய சிறை மற்றும் 10 ஆயிரம் தண்டப்பணம் விதித்து தீர்ப்பளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.