ஈரோஸ் ஜனநாயக முன்னணியின் தேசிய மாநாடு மட்டக்களப்பு கூட்டுறவுச் சங்க மண்டபத்தில இன்று இடம்பெற்றது.
ஈரோஸ் ஜனநாயக முன்னணியின் தலைவர் இரா.சிறிராஜ ராஜேந்திரா மற்றும் உறுப்பினர்கள் மாநாட்டில் கலந்து கொண்டிருந்ததுடன் கொவிட் சுகாதார நடைமுறைகளுக்கமைவாக மாவட்டங்களிலிருந்து குறைந்தளவான உறுப்பினர்களின் பங்குபற்றுதலுடன் மாநாடு நடைபெற்றமை குறிப்பிடதக்கது.