மட்டக்களப்பில் உலர் உணவு பொதிகளை வழங்கும் நடவடிக்கை இன்று முதல் ஆரம்பம்
November 1, 2020 05:35 pm
https://www.facebook.com/v3.0/plugins/like.php?app_id=&channel=https%3A%2F%2Fstaticxx.facebook.com%2Fx%2Fconnect%2Fxd_arbiter%2F%3Fversion%3D46%23cb%3Df27315acbc47188%26domain%3Dtamil.adaderana.lk%26origin%3Dhttp%253A%252F%252Ftamil.adaderana.lk%252Ff3d8fd8a28791e%26relation%3Dparent.parent&container_width=290&href=https%3A%2F%2Fwww.facebook.com%2FDeranatamil&locale=en_GB&sdk=joey&send=false&show_faces=true&width=450மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனா தொற்றுக் காரணமாக 14 பிரதேச செயலகப் பிரிவிலுள்ள 1,592 குடும்பங்களைச் சோந்த 3,956 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கு இரு வாரத்துக்கான உலர் உணவு பொதிகளை வழங்கும் நடவடிக்கை இன்று (01) முதல் பிரதேச செயலகங்களில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கணவதிப்பிள்ளை கருனாகரன் தெரிவித்தார்
நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்றையடுத்து மட்டக்களப்பு மாவட்டத்தில் கோறளைப்பற்று மத்தியில் 31 பேரும் களுவாஞ்சிக்குடியில் ஒருவரும், ஓட்டமாவடியில் ஒருவரும், பட்டிப்பளையில் ஒருவரும் வெல்லாவெளி பிரதேசத்தில் ஒருவருமாக 35 பேர் இதுவரைக்கும் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளமை பி.சி.ஆர் பிரிசோதனை மூலம் கண்டறியப்பட்டு வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் கொரோனா தொற்றுள்ளவர்களின் குடும்பங்கள் மற்றும் அவர்களுடன் பழகியவர்கள் உட்பட 1,592 குடும்பங்களைச் சேர்ந்த 3,959 பேர்கள் தனிமைப்படுத்தப் பட்டுள்ளனர்.
இவர்களின் குடும்பங்களுக்கு இரண்டு வாரங்களுக்கு தேவையான உலர் உணவுகளை வழங்குவதற்கான நிதியினை திறைசேரியின் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிக்கல உடனடியாக விடுவிக்கப்பட்டு பிரதேச செயலாளர்களுக்கு உலர் உணவுப் பொதிகளை வழங்குமாறு அரசாங்க அதிபர் உத்தரவிட்டார்.
இதனையடுத்து இன்று முதல் குறித்த நபர்களுக்கு பிரதேச செயலகங்கள் உலர் உணவு பொதிகளை வழங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.