மட்டக்களப்பு உன்னிச்சை கரவெட்டியாறு வயற்பிரதேசத்தில் உழவு இயந்திரம் தடம்புரண்டதில் 18 வயதுடைய வாலிபர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொரு இளைஞர் படுகாயமடைந்துள்ளார்.
அருணாச்சலம் அஜித்குமார் என்பவரே உயிரிழந்தவர் என ஆயித்தியமலை பொலிஸார் தெரிவித்தனர். மேலும் காயமடைந்தவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.
சடலம் செங்கலடி பிரதேச வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டதையடுத்து விசாரணையை திடீர் மரண விசாரணையதிகாரி எம்.எஸ்.எம். நஸிர் நடாத்தியதுடன் இறந்தவரின் உடலில் எவ்வித காயங்களும் காணப்படவில்லை என தெரிவித்தார்.
இதையடுத்து பிரேதம் உடல்கூறு பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டதாகவும்
இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் ஆயித்தியமலை பொலிஸார் தெரிவித்தனர்.
ஐந்து பிள்ளைகளைக் கொண்ட குடும்பத்தில் இவர் முதலாம் பிள்ளை எனவும் இவ்வாலிபர் தனது நண்பனுடன் உழவுஇயந்திரத்தில் சென்றபோது உழவு இயந்திரம் தடம்புரண்டு வாய்க்காலில் விழுந்துள்ளதாகவும் இவர் சாரதி அனுமதிப்பத்திரம் பெறாதவர் எனவும் முதற்கட்ட விசாரனையில் தெரியவந்துள்ளது.