மட்டக்களப்பு மாவட்டத்தின் மட்டக்களப்பு வாழைச்சேனை பிரதான வீதியின் மட்டக்களப்பு ஊறணி சந்திக்கான சமிச்சை விளக்கு பொருத்தும் வேலைத்திட்டத்திற்கான திட்டமிடல் தொடர்பாக பார்வையிடுவதற்கான விஜயம் ஒன்றினை மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் , இராஜாங்க அமைச்சருமான சிவநேசத்துரை சந்திரகாந்தன் தலைமையிலான அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்
மாவட்டத்தின் அபிவிருத்திக்காக இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தனுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 23 ஆம் ஆண்டுக்கான நிதியில் மாவட்டத்தி ன் பிரதான வீதிகளுக்கான சமிச்சை விளக்கு பொருத்தும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக டான் செய்தி பிரிவுக்கு தெரிவித்துள்ளார்
மாவட்டத்தின் மட்டக்களப்பு நகர் பகுதி பிரதான வீதிகளில் அதிகளவில் வீதி விபத்துக்கள் இடம்பெறுவதன் காரணமாக பொதுமக்களினால் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கிணங்க குறித்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக மேலும் தெரிவித்துள்ளார்