மட்டக்களப்பு கல்லடி டச்பார் புனித இஞ்ஞாசியார் ஆலயத்தில், மறைபரப்பு ஞாயிறு திருப்பலி

0
122

உலக மறைபரப்பு ஞாயிறு தினம் மெக்சிகோ நாட்டு எச்.எம்.எஸ்.பி அருட்சகோதரிகளினால் இன்று மட்டக்களப்பு கல்லடி டச்பார் புனித இஞ்ஞாசியார் ஆலயத்தில்
சிறப்பிக்கப்பட்டது
உலக கத்தோலிக்க திரு அவை பொதுக்காலத்தின் முப்பதாவது ஞாயிறு வாரம் உலக மறைபரப்பு தினத்தினை கொண்டாடுகின்றது .
1822 ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டில் லியோன் என்னும் நகரில் செல்வி மாரி பொலின் ஜெரிக்கோ என்பவரால் மறைபரப்பு சேவையினை உலக நாடுகளில் வளர்க்க வேண்டும்
என்ற நோக்காக கொண்டு மறைபரப்பு சபை ஆரம்பிக்கப்பட்டது.
மட்டக்களப்பு மறை மாவட்டத்தில் மறை மாவட்ட ஆயர் ஜோசப் பொன்னையா ஆண்டகையின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலின் கீழ் அனைத்து கத்தோலிக்க
திரு அவைகளிலும் விசேட திருப்பலியுடன் நிகழ்வுகள் இடம்பெற்றன.
கல்லடி டச்பார் புனித இஞ்ஞாசியார் ஆலயத்தில் கடந்த நான்கு வருடங்களுக்கு மேலாக மறைபரப்பு பணியை ஆற்றி வருகின்ற மெக்சிகோ நாட்டு அருட்சகோதரிகளின்
ஒழுங்கமைப்பில் பங்கு மறை ஆசிரியர்கள் இணைந்து பங்குத்தந்தை லோரன்ஸ் லோகநாதன் அடிகளார் தலைமையில் விசேட மறைபரப்பு ஞாயிறு திருப்பலி சிறப்பிக்கப்பட்டது.
மறைபரப்பு ஞாயிறு தின திருப்பலியை மட்டக்களப்புக்கு வருகை தந்துள்ள இயேசு சபை துறவி அருட்பணி சொலமன் ராஜ் அடிகளாரின் முதல் திருப்பலியாக
ஒப்புக்கொடுத்தார்.
முதல் திருப்பலியை ஒப்புகொடுத்த இயேசு சபை துறவி அருட்பணி சொலமன் ராஜ் அடிகளார் பங்கு சமூகத்தால் கௌரவிக்கப்பட்டத்துடன் ஆசிரியர் தினத்தை சிறப்பிக்கும்
வகையில் மறை ஆசிரியர்களும் கௌரவிக்கப்பட்டனர்.
இதேவேளை எச்.எம்.எஸ்.பி அருட்சகோதரிகளும் கௌரவிக்கப்படமை குறிப்பிடத்தக்கது.