25 C
Colombo
Tuesday, December 5, 2023
12,987FansLike
19,993SubscribersSubscribe

மட்டக்களப்பு கல்வி வலயத்தில் புலமைப்பரிசில் பரீட்சையில் 434 சித்தி

வெளியாகியுள்ள 2020 ஆம் ஆண்டுக்கான ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள் அடிப்படையில் மட்டக்களப்பு கல்வி வலயத்தில் 434 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர்.

2020 ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைக்கு மட்டக்களப்பு கல்வி வலயத்தில் 1942 மாணாவர்கள் தோற்றியிருந்த நிலையில் நேற்று வெளியான பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் 434 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர்.

இந்நிலையில் மட்டக்களப்பு கல்வி வலயத்தின் மட்டக்களப்பு நகர் பாடசாலைகளான மட்டக்களப்பு வின்சென்ட் மகளிர் தேசிய பாடசாலையில் 121 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றிய நிலையில் 74 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர்.

புனித மிக்கேல் கல்லூரியில் 158 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றி 74 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர்.

புனித சிசிலியா பெண்கள் கல்லூரியில் 127 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றி 33 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர்.

மெதடிஸ்த மத்திய கல்லூரியில் 98 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றிய நிலையில் 42 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர்.

கோட்டமுனை கனிஷ்ட வித்தியாலயத்தில் 154 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றிய நிலையில் 45 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர்.

இதன் அடிப்படையில் மட்டக்களப்பு கல்வி வலயத்தில் 434 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர்.

இந்நிலையில் வெளியாகியுள்ள ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் மட்டக்களப்பு வின்சன்ட் மகளிர் உயர் தேசிய பாடசாலை மாணவியான சிறிசங்கர் பவினயா 198 புள்ளிகளைப் பெற்று பாடசாலைக்கும் கல்வி வலயத்திற்கும் பெருமை சேர்த்து சாதனையினை படைத்துள்ளார்.

இதேவேளை புனித மிக்கேல் கல்லூரி மாணவன் வெனிஸிடன் அமில் ஷர்மின் 194 புள்ளிகளைப் பெற்று பாடசாலைக்கும் கல்வி வலயத்திற்கும் பெருமை சேர்த்துள்ளான்.

கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் கடந்த வருடத்தினை விட அதிகளவான மாணவர்கள் சித்தியடைந்துள்ளதாகவும், மட்டக்களப்பு கல்வி வலயத்தில் 93 வீதமாக மாணவர்கள் சித்தி பெற்று சாதனை படைத்துள்ளதாகவும் மட்டக்களப்பு வலய கல்வி பணிப்பாளர் சுஜாதா குலேந்திரன் தெரிவித்தார்.

Related Articles

ஹோட்டல் விருந்து கொலையில் முடிந்தது!

ஜா-எல பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் நேற்று இடம்பெற்ற விருந்தின் போது இடம்பெற்ற வாக்குவாதம் நீடித்ததில் இடம்பெற்ற மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.உயிரிழந்தவர் தும்பேலிய, ஜா-எல பகுதியைச் சேர்ந்த 34 வயதுடையவராவார்.உயிரிழந்த...

போலி ஸ்டிக்கர் சோதனை மூலம் மதுவரித் திணைக்களத்தின் வருமானம் அதிகரிப்பு!

மதுபான போத்தல்களில் ஒட்டப்பட்டுள்ள போலி ஸ்டிக்கர்களை சோதனை இட்டதன் மூலம் இலங்கை மதுவரித் திணைக்களத்தின் மாதாந்த வருமானம் ஒரு பில்லியன் ரூபாவால் அதிகரித்துள்ளதாக தேசிய பொருளாதார மற்றும் பௌதீகத் திட்டங்கள்...

இரு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி விபத்து: ஒருவர் பலி!

அனுராதபுரம் பாதெனிய வீதியில் அம்பன்பொல பேருந்து நிலையத்திற்கு அருகில் நேற்று இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.பாதெனியவில் இருந்து அனுராதபுரம் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள், கிளை வீதியிலிருந்து பிரதான...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest Articles

ஹோட்டல் விருந்து கொலையில் முடிந்தது!

ஜா-எல பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் நேற்று இடம்பெற்ற விருந்தின் போது இடம்பெற்ற வாக்குவாதம் நீடித்ததில் இடம்பெற்ற மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.உயிரிழந்தவர் தும்பேலிய, ஜா-எல பகுதியைச் சேர்ந்த 34 வயதுடையவராவார்.உயிரிழந்த...

போலி ஸ்டிக்கர் சோதனை மூலம் மதுவரித் திணைக்களத்தின் வருமானம் அதிகரிப்பு!

மதுபான போத்தல்களில் ஒட்டப்பட்டுள்ள போலி ஸ்டிக்கர்களை சோதனை இட்டதன் மூலம் இலங்கை மதுவரித் திணைக்களத்தின் மாதாந்த வருமானம் ஒரு பில்லியன் ரூபாவால் அதிகரித்துள்ளதாக தேசிய பொருளாதார மற்றும் பௌதீகத் திட்டங்கள்...

இரு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி விபத்து: ஒருவர் பலி!

அனுராதபுரம் பாதெனிய வீதியில் அம்பன்பொல பேருந்து நிலையத்திற்கு அருகில் நேற்று இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.பாதெனியவில் இருந்து அனுராதபுரம் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள், கிளை வீதியிலிருந்து பிரதான...

பால் புரையேறியதில் பச்சிளம் குழந்தை உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் - மிருசுவில் வடக்கு கொடிகாமத்தை சேர்ந்த குழந்தையொன்று பால் புரையேறியதில் உயிரிழந்துள்ளது. பிறந்து 26 நாட்களேயான ராசன் அஷ்வின் என்ற குழந்தை இவ்வாறு உயிரிழந்துள்ளது.

மீண்டும் மின் கட்டணம் அதிகரிக்க வாய்ப்பு?

அடுத்த மாதம் முதல் மீண்டும் மின் கட்டணம் அதிகரிக்கப்படும் என இலங்கை மின்சார ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் 18 வீதமாக...