மட்டக்களப்பு காத்தான்குடி மத்திய கல்;லூரியில் மாணவர் பாராளுமன்றத்திற்கான தேர்தல் இன்று இடம் பெற்றது.
கல்லூரி அதிபர் நிஹால் அஹமட் தலைமையில், தேர்தல் ஆணையாளராக ஆசிரியை சஞ்சீவிதா ஜெயகாந்தின் வழி நடாத்தலில்
தேர்தல் நடாத்தப்பட்டது.
50 மாணவர் பாராளுமன்ற உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக 83 மாணவ வேட்பாளர்கள் போட்டியிட்டதுடன் ஆயிரத்து 760 மாணவர்கள்
வாக்களிக்கத்தகுதி பெற்றிருந்தனர்.
ஆசிரியர்கள் தேர்தல் கண்காணிப்பாளர்களாக கலந்து கொண்டனர்.
வாக்கெண்ணும் பணிகள் உடனே இடம் பெற்று காத்தான்குடி மத்திய கல்லூரி தேசிய பாடசாலையின் மாணவர் பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டமையும்
குறிப்பிடத்தக்கது.