சப்பிரிகம தேசிய திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்ட பங்குடாவெளி பிரதேசத்தில் அமைக்கப்பட்ட கொங்கிறீட் வீதியினை மக்களது பாவனைக்காக கையளிக்கும் நிகழ்வு நடைபெற்றது.
இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு வீதியினை திறந்து வைத்தார்.
இவ்வீதி மிக நீண்டகாலமாக மணல் பாதையாகக் காணப்பட்டதால் மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
தற்போதைய அரசாங்கம் கொரோன நோயிலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்கு உச்சக்கட்ட நடவடிக்கை எடுப்பதற்குச் சமாந்தரமாக அபிவிருத்தி செயல் திட்டங்களையும் முன்னெடுத்துவருவதாக இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.