மட்டக்களப்பு பல் சமய ஒன்றியத்தின் நிர்வாக குழு மற்றும் மாவட்ட பல் சமய ஒன்றிய சம்மேளன வருடாந்த மீளாய்வு கூட்டம்

0
172

மட்டக்களப்பு பல் சமய ஒன்றியத்தின் நிர்வாக குழு மற்றும் மாவட்ட பல் சமய ஒன்றிய சம்மேளன வருடாந்த மீளாய்வு கூட்டம் இன்று மட்டக்களப்பு சாள்ஸ் மண்டபத்தில் நடைபெற்றது.

கரித்தாஸ் எகெட் நிறுவக இயக்குனர் அருட்தந்தை எ .ஜேசுதாசன் தலைமையில் நடைபெற்ற மட்டக்களப்பு பல் சமய ஒன்றியத்தின் நிர்வாக குழு மற்றும் மாவட்ட பல் சமய ஒன்றிய சம்மேளன வருடாந்த மீளாய்வு கூட்டத்தில் கடந்த கால செயல்பாடுகள் மற்றும் எதிர்கால திட்டமிடல் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

இணைப்பாளர் ஐ கிறிஸ்டி ஒழுங்கமைப்பில் நடைபெற்ற மீளாய்வு கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட பல் சமய ஒன்றியத்தின் நிர்வாக குழு உறுப்பினர்கள் கலந்துந்துகொண்டனர்