மட்;டக்களப்பு வாழைச்சேனை மீன் பிடி படகு உரிமையாளர்களால் இன்று கவனயீர்ப்பு போராட்டமொன்று மேற்கொள்ளப்பட்டது.
வி.எம்.எஸ் எனப்படும் கட்புல ஊடறு தொழில் நுட்ப கருவியின் கட்டணம், துறைமுகத்தில் தங்குமிடம் பற்றாக்குறை மற்றும் ஜஸ் கட்டியின் விலை அதிகரிப்பு தொடர்பாக அதற்கான தீர்வு கோரி இந்த கவனயீர்ப்பு போராட்டம் மீனவ படகு உரிமையாளர்களினால் வாழைச்சேனை துறைமுகத்திற்கு முன்பாக மேற்கொள்ளப்பட்டது.
மீனவனை வாழவிடு, ஜஸ் கட்டியின் விலையை மாற்றம் செய், படகு உரிமையாளர்களின் வாழ்வாதாரத்தை சுரண்டாதே, துறைமுக குறைபாடுகளை நிவர்த்தி செய், என்பன போன்ற வாசகங்கள் எழுதிய பதாதைகளை கையில் ஏந்தியவாறு ஜனாதிபதி மற்றும் கடல்தொழில் அமைச்சரின் கவனத்திற்காக கோஷங்களை எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இப்போராட்டமானது வாழைச்சேனை மீன் பிடி துறைமுக முகாமைத்துவதற்கும் கடல் தொழில் நீரியல் வள திணைக்களத்திற்கு எதிராக இந்த கவனயீர்ப்பு போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.