மட்டக்களப்பு வாழைச்சேனை கமநல சேவைகள் நிலையத்தில் பொங்கல் விழாவும் மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வும் இன்று கமநல பிரதேச அபிவிருத்தி உத்தியோகஸ்த்தர் கே.ஜெயக்காந்தன் தலைமையில் நடைபெற்றது.வாகநேரி நீர்பாசன திட்டத்தின் கீழ் உள்ள சுமார் 25 கண்டங்களைச் சேர்ந்த விவசாய அமைப்புக்கள் ஓன்று சேர்ந்து இவ் பொங்கல் விழாவினை கொண்டாடினார்கள்.
சர்வமத குருமார்களின் ஆசியுரை,மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
விவசாயிகளும் பாராட்டப்பட்டதுடன் விவசாயிகளின் பிள்ளைகளின் கல்வி வளர்ச்சிக்காக நிதி உதவி திட்டங்களும் வழங்கி வைக்கப்பட்டன.
மட்டக்களப்பு கமநல அபிவிருத்தி திணைக்கள பிரதி ஆணையாளர் கே.ஜகன்நாத்,
கோறளைப்பற்று பிரதேச செயலாளர் ஜெயந்தி திருச்செல்வம் ஆகியோர்கள் பிரதம அதிதிகளாகவும் மட்டக்களப்பு மத்தி நீர்பாசன பணிப்பாளர் என்.நாகரெத்தினம், மட்டக்களப்பு பிரதி விவசாயப் பணிப்பாளர் வி.பேரின்பராசா, கரடியனாறு விதை மற்றும் நடுகைப் பொருட்கள் அபிவிருத்தி நிலைய பிரதிப் பணிப்பாளர் ஆர்.சிவநேசன்,மற்றும் வாழைச்சேனை கமநல அபிவிருத்திக் குழுத் தலைவர் எம்.எல்.எம்.சித்தீக் ஆகியோர்கள் சிறப்பு விருந்தினர்களாகவும் கலந்து கொண்டனர்.