மட்டு. கல்குடாவில் ஐ.தே.கட்சியின் ஆதரவாளர்களுக்கிடையிலான சந்திப்பு!

0
201

மட்டக்களப்பு கல்குடா தொகுதியின் மீராவோடை பிரதேசத்தில் ஐக்கிய தேசியக்கட்சியின் ஆதரவாளர்கள், பொதுமக்கள் மற்றும் செயற்பாட்டாளர்களுக்கிடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றது.
இதன்போது கட்சியின் பொதுச் செயலாளர் றங்கே பண்டார பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.
2019 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின்போது 69 இலட்சம் மக்கள் எடுத்த பிழையான தீர்மானத்தை இனியொருபோதும் எடுக்கக்கூடாது என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் றங்கே பண்டார தெரிவித்தார்.