மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேச செயலகப் பிரிவில் பிரிவிலுள்ள புதிய காத்தான்குடி 167ஏ கிராம உத்தியோகத்தர் பிரிவில், மரவெள்ளி கிழங்கு அறுவடை வைபவம் இன்று
இடம்பெற்றது
காத்தான்குடி பிரதேச செயலாளர் யு.உதய ஸ்ரீதர் மரவள்ளி கிழங்கு அறுவடையை ஆரம்பித்து வைத்தார்
உணவு பாதுகாப்பு திட்டத்தின் கீழ் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தினால் மரவள்ளி தடிகள் கடந்த வருடம் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டன.
மரவெள்ளித் தடிகள் வழங்கப்பட்ட பயனாளியான, எம். இப்ராஹீம்மின் வீட்டுத் தோட்டத்திலேயே அறுவடை நிகழ்வு இடம்பெற்றது.
நிகழ்வில் சமுர்த்தி தலைமையக முகாமையாளர் பத்மா ஜெயராஜ், திட்ட முகாமையாளர் சுபந்தினி கண்ணன், அப் பகுதி கிராம உத்தியோகத்தர் நசீமா ஜரூப், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் முஹம்மத் தாஹிர்
உட்பட பலரும் கலந்து கொண்டனர்