மட்டக்களப்பு காத்தான்குடி மத்திய கல்லூரி தேசிய பாடசாலைக்கு 1991ம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர சாதாரண தரம் 1994ம் ஆண்டு உயர் தரம் கற்ற பழைய மாணவர்கள் குழுவினால் வெண்பலகை இன்று வழங்கி வைக்கப்பட்டது.
இதனை வழங்கி வைக்கும் வைபவம் பாடசாலை கூட்ட மண்டபத்தில் நடைபெற்றது.
இதன் போது காத்தான்குடி மத்திய கல்லூரி தேசிய பாடசாலையில் 1991ம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர சாதாரண தரம் 1994ம் ஆண்டு உயர் தரம் கற்ற பழைய மாணவர்கள் குழுவினால் 47 வெண்பலகைகள் பாடசாலை அதிபர் எம்.சி.எம்.ஏ.சத்தார் அவர்களிடம் கையளிக்கப்பட்டது.
இந்த வைபவத்தில் கல்லூரி அதிபர் எம்.சி.எம்.ஏ. சத்தார் ,பிரதி அதிபர் முகம்மட் நிகால் பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்க பிரதிநிதிகள் காத்தான்குடி மத்திய கல்லூரி தேசிய பாடசாலையில் 1991ம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர சாதாரண தரம் 1994ம் ஆண்டு உயர் தரம் கற்ற
மாணவர்கள் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்