அமெரிக்காவில் வசிக்கும் ரி.எம்.வாசகர் குடும்பத்தின் ஆதரவில் மயிலந்தனை புணானை கிராமத்தில் முதலாவது குழாய் கிணறு அமைக்கப்பட்டு பொதுப்பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது.
சமூக ஆர்வலர் க.குககுமாரராஜாவிடம் பிரதேச மக்கள் விடுத்த வேண்டுகோளினையடுத்து இவ் மனித நேய உதவி வழங்கப்பட்டுள்ளது.
மீள் குடியேற்ற கிராமமான இக் கிராம மக்கள் தங்களது குடி நீர் மற்றும் ஏனைய நீர் பாவனைக்காக அருகில் உள்ள ஆற்றினை பயன்படுத்தி வரும் அதேவேளை, முதலைகளின் தாக்குதலுக்குள்ளாகி உயிர் பலியாகும் நிலையும் காணப்படுகிறது.
பிரதேசத்தில் மக்களின் பாவனைக்காக அமைக்கப்பட்ட கிணறுகள் மக்களின் நீர் பாவனையை முழுமையாக பூர்த்தி செய்யக் கூடியதாக இல்லை என்பதுடன் அவை வரட்சி காலத்தில வற்றிவிடும் நிலை காணப்படுகிறது ஒரு சில இடங்களிலே நீர் பெறக் கூடிய வாய்ப்புள்ளது.
இந்நிலையில் குறித்த கிராம மக்கள் விடுத்த வேண்டுகோளுக்கிணங்களை அவர்களின் நிலைமைகளை கருத்தில் கொண்டு குழாய்; கிணறு அமைக்கப்பட்டது.
வைபவ ரீதியாக மக்கள் பாவனைக்காக குடி நீர் வழங்கப்பட்டபோது சிறுவர் முதல் முதியவர்கள் வரை மகிழ்ச்சியோடு ஆர்வத்துடன் நீரினை பருகினர்.
இதேவேளை நிழகழ்வின் போது கற்றல் உபகரணங்கள் மற்றும் வகுப்பறை பொருட்கள் என்பன வழங்கப்பட்டது. அத்துடன் லண்டனில் வசிக்கும் அங்கயற்கன்னி அம்மணியின் ஏற்பாட்டில் கிராமத்தில் வசிக்கும் அனைத்து மக்களின் நலன் கருதி விசேட மதிய உணவும் வழங்கப்பட்டது.
யாழ்பாணத்தினைச் சேர்ந்த ‘கிறின் லேயர்’; அமைப்பினரால் ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் பயன் தரும் மரங்கள் வழங்கி வைக்கப்பட்டது.
பல்வேறு உதவிகளை ஓரே நாளில் வழங்கி வைத்த நலன் புரி அமைப்புக்களுக்கும் மயிலந்தனை மக்கள் தங்களது நன்றியை தெரிவித்தனர்.