மட்டு.மயிலம்பாவெளியில் டெங்கு ஒழிப்பு விசேட விழிப்புணர்வு

0
204

டெங்கு ஒழிப்பு விசேட விழிப்புணர்வு நடைபவனியும் விழிப்புணர்வு வீதி நாடகமும் மட்டக்களப்பு மயிலம்பாவெளி ஸ்ரீ விக்னேஸ்வரா வித்தியாலய மாணவர்களினால் முன்னெடுக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் மட்டக்களப்பு கல்வி வலயதிற்குட்பட்ட பாடசாலைகளில் பொது சுகாதார அலுவலக அதிகாரிகளின் பணிப்புரையின் கீழ் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

ஏறாவூர் செங்கலடி பொதுசுகாதார அலுவலக அதிகாரிகளின் ஆலோசனைக்கு அமைய மட்டக்களப்பு மயிலம்பாவெளி ஸ்ரீ விக்னேஸ்வரா வித்தியாலய அதிபர் கே .பாஸ்கரன் தலைமையில் பாடசாலை சுகாதார கழக ஆசிரியரின் ஒழுங்கமைப்பில் மாணவர்களின் பங்களிப்புடன் பொதுமக்களுக்கான டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு வீதி நடைபவனியும் வீதி நாடகமும் மயிலம்பாவெளி ஸ்ரீ விக்னேஸ்வரா வித்தியாலயத்திலிருந்து தன்னாமுனை புனித ஜோசெப் கல்லூரி வரை முன்னெடுக்கப்பட்டன .

அதனை தொடர்ந்து விழிப்புணர்வு வீதி நாடகம் தன்னாமுனை புனித ஜோசெப் கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றது

இந்நிகழ்வில் மட்டக்களப்பு வலயக்கல்வி அலுவலக உதவி கல்விப்பணிப்பாளர் ஆர் ஜெ .பிரபாகர் , தன்னாமுனை புனித ஜோசெப் கல்லூரி அதிபர் எம் .பெற்றிக் , பொதுசுகாதார பரிசோதகர் பி .மனோகரன் உட்பட பாடசாலை ஆசிரியர்கள் ,மாணவர்கள் என பலர் கலந்துகொண்டனர்

தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு – சுகாதார அமைச்சு மற்றும் ஜனாதிபதி டெங்கு ஒழிப்பு பணிப்பிரிவு ஆகியவற்றின் பணிப்புரைக்கு அமைவாக தேசிய ரீதியில் பாடசாலைகள் மட்டத்தில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.