மத்தியஸ்த நுட்பம், தந்திரோபாயங்கள் எனும் தலைப்பில் செயலமர்வு

0
148

காத்தான்குடி பிரதேச செயலக பிரிவிலுள்ள மத்தியஸ்த சபை மத்தியஸ்தர்களுக்கான மத்தியஸ்த நுட்பம் மற்றும் தந்திரோபாயங்கள் எனும் தலைப்பிலான ஐந்து நாள் பயிற்சி செயலமர்வு காத்தான்குடி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

காத்தான்குடி பிரதேச செயலாளர் யு.உதய ஸ்ரீதர் இந்த செயலமர்வை ஆரம்பித்து வைத்தார்.

நீதியமைச்சின் மத்தியஸ்த ஆணைக்குழுவின் மத்தியஸ்த சபை உறுப்பினர்களை பயிற்று விக்கும் திட்டத்தின் கீழ் இந்த பயிற்சி செயலமர்வு நடைபெறுகிறது.

இந்த செயலமர்வில் காத்தான்குடி பிரதேச செயலக பிரிவிலுள்ள 55 பேர் கலந்து கொண்டுள்ளதாக அம்பாரை மட்டக்களப்பு மாவட்டங்களின் மத்தியஸ்தர்களை பயிற்றுவிக்கும் பயிற்றுனர் எம்.ஐ.எம.ஆஸாத் தெரிந்தார்.

இவர்களுக்கான ஐந்து நாள் செயலமர்வு நிறைவின் போது எழுத்து மூலமான பரீட்சை இடம்பெற்று அதன் மூலம் மத்தியஸ்த ஆணைக்குழு மத்தியஸ்த சபை உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுவார்கள்.

இந்த செயலமர்வில் அம்பாரை மட்டக்களப்பு, மாவட்டங்களின் மத்தியஸ்தர்களை பயிற்றுவிக்கும் பயிற்றுனர் எம்.ஐ.எம.ஆஸாத், மன்னார் வவுனியா மத்தியஸ்தர்களை பயிற்றுவிக்கும் பயிற்றுனர் எஸ்.விமல்ராஜ் ஆகியோர் விரிவுரைகளை நடாத்துகின்றனர்

இதில் அபிவிருத்தி உத்தியோகத்தர்களான எம்‌ஹிஸ்புல்லாஹ், எம்.ஏ.எம.அஜுன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.