மந்திகை ஆதார வைத்தியசாலை வளாகத்தில் கறுப்பு கொடி!

0
254

பருத்தித்துறை மந்திகை ஆதார வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினரால் இன்றைய தினம் கறுப்பு வாரத்தின் ஆரம்ப நிகழ்வாக வைத்தியசாலை வளாகத்தில் கறுப்பு கொடிகளை பறக்கவிட்டும் கறுப்பு பட்டி அணிந்து கடமையினை மேற்கொண்டும் தமது எதிர்ப்பினை தெரிவித்திருந்தனர்.

அரச வைத்தியசாலையில் நிலவும் மருந்து தட்டுப்பாடு, சத்திர சிகிச்சை உபகரணங்களுக்கான தட்டுப்பாடு என்பவற்றை நிவர்த்தி செய்து அதற்குரிய வழங்களை சீரான முறையில் வழங்குமாறு கோரியும், முறையற்ற விதத்தில் தன்னிச்சையாக வரி என்ற பேரில் அரசாங்கத்தினால் பறிக்கப்படும் சம்பள பணத்திற்கு எதிராகவும்,   இந்த கறுப்பு பட்டி போராட்டம் முன் எடுக்கப்படுகிறது.

இதன் தொடர்ச்சியாக எதிர்வரும் வியாழக்கிழமை வடமாகாணம் முழுவதும் அரசாங்கத்தினால் நிர்வகிக்க தவறிய மருந்து பொருட்களுக்கான முறையற்ற  வழங்குதலுக்கு  எதிராக அரச வைத்தியசாலையில் சிகிச்சை பெற வரும் பொதுமக்களிடம் கையெழுத்து பெறப்படும் போராட்டம்  எமது வைத்தியசாலையிலும் முன்னெடுக்கப்படவுள்ளது.