மன்னார் சித்திவிநாயகர் இந்துக் கல்லூரியின் விளையாட்டுப்போட்டிகள்

0
87

மன்னார் சித்திவிநாயகர் இந்துக் கல்லூரியின் 64ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு கல்லூரியின் பழைய மாணவர் சங்கம், கல்லூரியின் பழைய மாணவர்களுக்கு இடையிலான மென்பந்து கிரிக்கெட் போட்டி, கால்ப்பந்தாட்ட போட்டி மற்றும் வலைப்பந்தாட்ட போட்டிகளை நடத்தவுள்ளது.

கல்லூரியின் பழைய மாணவர் சங்கமானது ஆண்களுக்கான மென்பந்து கிரிக்கெட் போட்டி, கரப்பந்தாட்ட போட்டிகளையும் மற்றும் பெண்களுக்கான வலைப்பந்துபோட்டிகளையும் எதிர்வரும் 12,13,14 ஆம் ஆகிய திகதிகளில் நடத்த இருப்பதோடு அவற்றின் மாபெரும் இறுதி போட்டியையும் கோலாகல நிகழ்வையும் பிரமாண்டமாக எதிர்வரும் 15ஆம் திகதி கல்லூரியில் நடத்துவதற்கு ஒழுங்கமைத்துள்ளது.