மன்னார் நானாட்டான் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மட்டு. மண்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு களவிஜயம்

0
465

மன்னார் மாவட்ட நானாட்டான் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் குழுவினர் மட்டக்களப்புக்கு களவிஜயம் மேற்கொண்டனர்.

மன்னார் மாவட்ட நானாட்டான் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் அடங்கிய குழுவினர் மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு களவிஜயம் ஒன்றினை மேற்கொண்டனர்.

மன்னார் மாவட்ட எ .டி . ஆர் .எ . நிறுவனம் அவுஸ்ரேலியா அரசாங்கத்தின் நிதி உதவியின் கீழ் மன்னார் மாவட்டத்தின் நானாட்டான் பிரதேச செயலக மட்டத்தில் பிரதேச செயலகத்துடன் இணைந்து உற்பத்தி திறன் மேம்பாடு தொடர்பான பல செயல்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது

உற்பத்தி திறன் செயல்திட்டத்தில் தேசிய மட்டத்தில் முதல் இடத்தினை பெற்றுக்கொண்ட மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் செயல்பாடுகள் அதன் ஒழுங்குமுறைகள் மற்றும் அதன் நடைமுறைகள் தொடர்பாக அறிந்துகொள்ளும் வகையில் மன்னார் மாவட்ட நானாட்டான் பிரதேச செயலாளர் எம் .ஸ்ரீஸ்கந்தகுமார் தலைமையிலான உத்தியோகத்தர்கள் குழுவினர் பிரதேச செயலகத்து கள விஜயம் ஒன்றினை மேற்கொண்டுள்ளனர் .

மண்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு வருகைதந்த உத்தியோகத்தர்களை வரவேற்கும் கலந்துரையாடல்கள் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி .வாசுதேவன் தலைமையில் இடம்பெற்றதுடன் இதன் போது உதவி பிரதேச செயலாளர்கள் , பிரதி திட்டமிடல் பணிப்பாளர் , பிரதேச செயலக கணக்காளர்கள் உட்பட பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்