மரணச்சான்றிதழ், நஷ்டஈடு தேவையில்லை!- காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள்

0
197

நாங்கள் ஒருபோதும் மரணச்சான்றிதழ் மற்றும் நஷ்டஈட்டை பெற்றுக்கொள்ள தயார் இல்லை.

ஒப்படைக்கப்பட்ட எமது பிள்ளைகளுக்கு, உறவுகளுக்கு என்ன நடந்தது?, நாங்கள் பணத்திற்காக இத்தனை வருடங்கள் வீதியில் நின்று போராடவில்லை என மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்க தலைவி மனுவல் உதயச்சந்திரா தெரிவித்துள்ளார்.

மன்னாரில் இன்று காலை நடத்திய ஊடக சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.