ஹோமாகம பிட்டிபன பிரதேசத்தில் இடம்பெற்ற மரணவீடொன்றில் கலந்துகொண்ட 25 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக ஹோமாகம சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தின் பொதுசுகாதார பரிசோதகர் பிரியந்த விஜேசூரிய தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்றினால் மேற்படிப் பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணொருவர் அண்மையில் மரணமடைந்துள்ளார்.
பிசிஆர் பரிசோதனை அறிக்கைகள் வெளிவருவதற்கு முன்பாகவே அப் பெண்ணின் மகள், இறுதிச் சடங்குக்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளார்.
இந்நிலையில் இறுதிச் சடங்குக்கான ஏற்பாடுகளை மேற்கொண்டவர்களே கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர் என்று, பொதுசுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை மரண வீட்டில் பங்கேற்ற மேலும் 64 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.