அம்பாறை மல்வத்தை விபுலானந்த சிக்கன கடனுதவு கூட்டுறவு சங்கம் கடந்த மூன்று தசாப்த காலமாக செயல் இழந்து இருந்த நிலையில் கல்முனை அம்பாறை மாவட்ட சிக்கன கடனுதவு கூட்டுறவு சங்கங்களின் சமாச தலைவர் எஸ்.லோகநாதன் முயற்சியில் இன்று புனரமைப்பு செய்யப்பட்டது.
1988 இல் இது பதிவு செய்யப்பட்டு இரு வருடங்கள் சிறப்பாக இயங்கியிருந்த போதிலும் கலவரம் காரணமாக இப்பிரதேச மக்கள் 90ஆம் ஆண்டு இடம்பெயர்ந்து செல்ல நேர்ந்ததால் முடங்கி போனது.
கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆறுமுகம் நடராசலிங்கத்தின் பங்கேற்புடன் இடம்பெற்ற கூட்டத்தில் வைத்து புதிய நிர்வாகம் தெரிவு செய்யப்பட்டது.
புலம்பெயர் நாடுகளில் உள்ள வட மாகாண அன்பர்கள் சிக்கன கடனுதவு கடனுதவு கூட்டுறவு சங்க முறைமை மூலமாக வடக்கு, கிழக்கில் உள்ள தாயக உறவுகளுக்கு உதவி செய்ய முன்வந்துள்ள நிலையில் கிழக்கு மாகாணத்தில் செயல் இழந்த நிலையில் உள்ள சிக்கன கடனுதவு கூட்டுறவு சங்கங்களை புனரமைக்கின்ற வேலை திட்டத்தை கூட்டுறவு திணைக்களத்தின் ஒத்துழைப்புடன் லோகநாதன் முன்னெடுத்துள்ளார்.