மாமன் கொலை ; மருமகனுக்கு மரண தண்டனை! – வவுனியா நீதிமன்றம் தீர்ப்பு

0
256

மாமனைக் கொலை செய்த மருமகனுக்கு வவுனியா மேல் நீதிமன்றால் மரண தண்டனை வழங்கித் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

வவுனியா செட்டிக்குளம் மெனிக்பாம் பகுதியில் கடந்த 2005 ஆண்டு காலப்பகுதியில் மாமனுக்கும் மருமகனுக்கும் இடையே பணக் கொடுக்கல் வாங்கல் தகராறுடன் கூடிய முறுகல் நிலையைத் தொடர்ந்து, மெனிக்பாம் கிராமத்தில் தனது வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த மாமனை நள்ளிரவு வேளையில் கோடரியால் தாக்கிக் கொலை செய்தார் என மருமகன் மீது குற்றம் சாட்டப்பட்ட நிலையில் கைதுசெய்யப்பட்டு வழக்குத் தொடுக்கப்பட்டது.

2018.08.20 ஆம் திகதி சட்டமா அதிபர் திணைக்களத்தால் குற்றப்பகிர்வு பத்திரம் தாக்கல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட வழக்கு விசாரணைகளின் பின்னர் வவுனியா மேல் நீதிமன்றால் அவருக்கு எதிராக நேற்று முன்தினம் (04.11.2020) மரண தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.