மாளிகைக்காடு ஜனாஸா மையவாடிக்கு பதிலாக புதிய மையவாடியை அமைக்குமாறு கோரிக்கை

0
158

அம்பாறை மாளிகைக்காடு பிரதேச ஜனாஸா மையவாடி கடலரிப்புக்குள்ளாகி அழிவடைந்து வரும் நிலையில், மாற்று இடத்தில் புதிய ஜனாஸா மையவாடியை அமைக்கவேண்டிய தேவை உள்ளதால்
உடனடியாக புதிய காணியொன்றை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி, ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அமைச்சர்களுக்கான மகஜரொன்று கையளிக்கப்பட்டுள்ளது.
அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர், காரைதீவு மற்றும் சாய்ந்தமருது பிரதேச செயலாளர்கள் ஆகியோரிடமே இந்த மகஜர்களை மாளிகைக்காடு அல்- மீஸான் பௌண்டஷன் ஸ்ரீலங்கா
வழங்கியுள்ளது.
அரச அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டுள்ள மகஜரில், அம்பாறை காரைதீவு பிரதேச செயலகம் மற்றும் காரைதீவு பிரதேச சபையின் நிர்வாகத்திற்குட்பட்ட மாளிகைக்காடு கிராம மக்களின் ஜனாஸா மையவாடி
கடலரிப்பில் முழுமையாக சேதமாகியுள்ளதுடன், ஜனாஸாக்கள் கடலில் அள்ளுண்ட போன வரலாறுகள் கடந்த காலங்களில் பதிவாகின.
மாளிகைக்காடு ஜூம்மா பெரிய பள்ளிவாசலின் பராமரிப்பில் உள்ள அந்நூர் ஜனாஸா அடக்கஸ்தலம் மோசமான கடல் அரிப்பினால் பாதிக்கப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்ட ஜனாஸாக்கள் கடலில் அடித்துச் செல்லப்பட்டு வருகின்றன. மாளிகைக்காடு, மக்கள் முழுமையாகவும் சாய்ந்தமருது மக்கள் சில பகுதியினருமடங்கலாக 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த மையவாடியையே பயன்படுத்தி வருகின்றனர்.
கடலரிப்பினால் தொடர்ந்தும் இந்த மையவாடி பாதிக்கப்பட்டால், இன்னும் சில மாதங்களில் ஜனாஸா நல்லடக்கம் செய்ய இடமில்லாமல் மக்கள் திண்டாடும் நிலை உருவாகும் எனவே உரிய நடவடிக்கை எடுக்குமாறு
கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.