மிளகாய் மற்றும் நிலக்கடலை செய்கையாளர்களுக்கு விவசாய உபகரணங்கள் வழங்கல்

0
127

அம்பாறை திருக்கோவில் பிரதேசத்தில் காலநிலைக்கு சீரமைவான விவசாய அபிவிருத்தி திட்டத்தின் ஊடாக உலக வங்கியின் நிதிப் பங்களிப்புடன் நிலக்கடலை மற்றும் மிளகாய் செய்கையாளர்களுக்கு நீர் பம்பிகள் மானியமாக வழங்கி வைக்கப்பட்டன.
திருக்கோவில் பிரதேச செயலாளர் ரீ.கஜேந்திரன் தலைமையில் பிரதேச செயலக வளாகத்தில் வைத்து இன்றைய தினம் நீர்ப்பம்பிகள் வழங்கப்பட்டன.
தங்கவேலாயுதபுரம், விசாயகபுரம் ஆகிய விவசாயக் கிராமங்களைச் சேர்ந்த தெரிவு செய்யப்பட்ட விவசாயிகளுக்கே நீர்ப்பம்பிகள் வழங்கப்பட்டன.
;நிகழ்வில் திருக்கோவில் உதவிப் பிரதேச செயலாளர் கே.சதிசேகரன், உதவி திட்டமிடல் பணிப்பாளர் அனோஜா உஷாந், கிராம சேவை நிர்வாக உத்தியோகத்தர்
ஏ.கந்தசாமி உட்பட பலரும் கலந்துகொண்டனர்.