கொவிட் – 19 காரணமாக கடற்றொழில் செயற்பாடுகள் சீரற்ற நிலையில் காணப்படுவதனால் கரைக்கு கொண்டு வரப்படுகின்ற மீன்களை களஞ்சிப்படுத்தல், கருவாடு பதனிடுதல் மற்றும் ரின்மீன் உற்பத்திகளை மேற்கொள்வதற்கு சம்மந்தப்பட்ட தரப்பினர் முன்வர வேண்டும் என்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மீன் ஏற்றுமதியாளர்கள், கருவாடு உற்பத்தியாளர்கள், ரின் மீன் உற்பத்தியாளர்கள் ஆகியோருக்கும்; அமைச்சு அதிகாரிகளுக்கும் இடையில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் இராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜேசேகர ஆகியோர் தலைமையில் இன்று (26) இடம்பெற்ற விசேட கலந்தரையாடலின் போதே கடற்றொழில் அமைச்சர் டகள்ஸ் தேவானந்தாவினால் குறித்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
கொவிட. 19 காரணமாக பேலியகொட மீன் சந்தை உட்பட பல்வேறு மீன் சந்தைகள் மற்றும் மீன்பிடித் துறைமுகங்களின் செயற்பாடுகள் தற்காலிகாக இடை நிறுத்தப்பட்டுள்ளதுடன் ஏற்றுமதியும் தடைப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, பலநாள் கலங்களில் மூலம் பிடித்து வருப்பட்ட ஆயிரக்கணக்கான தொன் மீன்கள் டிக்கோவிற்ற உட்பட நாட்டின் பல்வேறு துறைமுகங்களில் தேங்கிக் கிடப்பதனால் பழுதடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதுதொடர்பாக ஏற்பாடு செய்யப்பட்ட இன்றைய அவசர கலந்துரையாடலில், கருத்து தெரிவித்த கருவாடு மற்றும் ரின்மீன் உற்பத்தியாளர்கள், மீன்பிடித் துறைமுகங்களில் தேங்கிக் கிடக்கின்ற மீன்களை கொள்வனவு செய்து உற்பத்திகளை மேற்கொள்வதற்கு தாங்கள் தயாராக இருக்கின்ற போதிலும், கருவாடு மற்றும் ரின்மீன் போன்றவற்றிற்கான இறக்குமதி வரி தளர்த்தப்பட்டுள்ளதனால் தமது உள்ளுர் உற்பத்திகளுக்கு போதிய சந்தை வாய்ப்;பு இல்லாமல் இருப்பதாக தெரிவித்தனர்.
இதற்கு பதில் அளித்த கடற்றொழில் அமைச்சர் – இராஜாங்க அமைச்சர் ஆகியோர் குறித்த பொருட்களுக்கான இறக்குமதி வரி தொடர்பாக அமைச்சரவையில் கலந்துரையாடுவதாகவும் அமைச்சர் பந்துல குணவர்தனவுடன் கலந்துரையாடி சதோச வர்த்தக நிலையங்களில் உள்ளூர் உற்பத்திகளுக்கான முன்னுரிமை அளிக்க நடவடிக்கை மேற்கொள்வதாகவும் உறுதியளித்;துடன் தேங்கிக் கிடக்கின்ற மீன்கள் பழுதடைவதை தவிர்ப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் கேட்டுக் கொண்டனர்.
அதேவேளை, அண்மையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியினால் கடற்றொழில் திணைக்களத்திற்கு கிடைத்த 200 மில்லின் ரூபாய் நிதியைப் பயன்படுத்தி, மேலதிகமாக எஞ்சுகின்ற மீன்களை கொள்வனவு செய்து களஞ்சிப்படுத்தி மக்களுக்கு விநியோகிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டது.
அத்துடன் குறித்த மீன்களை கடற்றொழில் கூட்டுத்தாபனம் கொள்வனவு செய்வதற்கான விலைகளும் இன்றைய கலந்துரையாடலில் நிர்ணயிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.