முல்லைத்தீவில் போதைப்பொருட்கள் மீட்பு, சந்தேக நபர்கள் தப்பி ஓட்டம்!

0
211

முல்லைத்தீவு – முள்ளியவளை கணுக்கேணி பகுதியில் போதைப் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதோடு, சந்தேக நபர்கள் தப்பிச் சென்றுள்ள சம்பவம் ஒன்று நேற்று இடம்பெற்றுள்ளது.

நேற்று இரவு 9 மணியளவில் இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போது, சந்தேக நபர்கள் போதைப் பொருள்களை போட்டுவிட்டு தப்பி ஓடியநிலையில், குறித்த இடத்திலிருந்து சிறு சிறு பொதி செய்யப்பட்ட வகையில் 4 கட்டு ஹெரோயினுடன், 4 கிராம் குடு போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைப்பற்றப்பட்டுள்ள போதை பொருட்கள் முள்ளியவளை பொலிஸில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், சந்தேக நபர்களை பொலிஸார் தேடி வருவதாகவும் விசாரணைகளின் பின்னர் போதைப்பொருளை முல்லைத்தீவு நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.