
வவுனியாவில், முள்ளிவாய்க்கால் மனிதப் பேரவலத்தை நினைவூட்டும் வகையிலான, முள்ளிவாய்க்கால் நினைவு சுமந்த ஊர்திப் பவனிக்கு மக்கள் அஞ்சலி செலுத்தினர்.
முல்லைத்தீவில் இருந்து நேற்றையதினம் ஆரம்பமாகிய ஊர்திப் பவனியானது, நேற்றிரவு வவுனியாவை அடைந்தது.
இந்தநிலையில், இன்று காலை வவுனியா பழைய பேருந்து நிலையத்தில், முள்ளிவாய்க்கால் நினைவு சுமந்த ஊர்தி பவனிக்கு மக்கள் அஞ்சலி செலுத்தினர்.
அதன் பின்னர் குறித்த ஊர்திப் பவனி நகரை வலம் வந்தது, மன்னார் நோக்கி பயணித்துள்ளது.