கொழும்பு – கொட்டாவ நகரப் பகுதியில் அமைந்துள்ள மீன் விற்பனைச் சந்தையில் பணி புரியும் நான்கு ஊழியர்கள் இன்று 21 ஆம் திகதி கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டதாக மஹரகம சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.
அதன்படி, மீன் சந்தை மற்றும் அவர்கள் தங்கியிருந்த கட்டிடம் என்பன சீல் வைக்கப்பட்டுள்ளதுடன் கொரோனா தொற்றாளர்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட சுமார் 40 பேர் தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளனர்.