மேல்மாகாணத்திலிருந்து நேற்றைய தினம் வெளியேறியவர்களைப் பற்றிய விபரங்களைச் சேகரிப்பதற்காக விஷேட நடவடிக்கை ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
நேற்று நள்ளிரவு 12.00 மணி முதல் மேல்மாகாணத்தில் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த அதேவேளையில், மேல் மாகாணத்திலிருந்து யாரும் வெளியே செல்வதற்கு அனுமதிக்கப்படமாட்டார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஊரடங்குச் சட்டத்துக்கு முன்னதாக மேல்மாகாணத்திலிருந்து வெளியேறிவிட வேண்டும் எனச் சென்ற பலர் திருப்பி அனுப்பப்பட்டனர். அதனையும் மீறி பலர் வெளிமாவட்டங்களுக்குச் சென்றுள்ளார்கள். அவர்களைப் பற்றிய தகவல்களைச் சேகரிப்பதற்காகவே விஷேட நடவடிக்கை ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.