மேல் மாகாணத்தின் சில பிரதேசங்க ள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்படலாம்!

0
354

தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு எதிர்வரும் 09 ஆம் திகதி தளர்த்தப்பட்ட போதும் மேல் மாகாணத்தினுள் தேர்ந்தெடுக்கப்பட்ட சில பிரதேசங்களை தொடர்ந்தும் தனிமைப்படுத்தி வைப்பதற்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பு மாவட்ட ஒருங்கிணைப்பு குழுத் தவிசாளர் பாராளுமன்ற உறுப்பினர் மேஜர் பிரதீப் உந்துகொட இதனை தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்தும் கருந்து தெரிவித்த அவர், அரசாங்கம் என்ற ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட சில பிரதேசங்களை தனிமைப்படுத்தி எஞ்சிய பிரதேசங்களை பொதுமக்களின் அன்றாட நடவடிக்கைகளுக்காக திறக்க எதிர்ப்பார்த்துள்ளோம்´. என்றார்.

இதேவேளை, கொவிட் தொற்றாளர் ஒருவர் இனங்காணப்பட்டதை தொடர்ந்து கடந்த ஒக்டோபர் மாதம் 22 ஆம் திகதி மூடப்பட்ட புறக்கோட்டை மெனிங் சந்தை எதிர்வரும் திங்கட் கிழமை முதல் மீண்டும் திறக்கப்படவுள்ளதாக “மானிங் பொது தொழிற்சங்கம்” தெரிவித்துள்ளது.